மட்டக்களப்பில் இரு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுணதீவு சோதனைச்சாவடியில், இரவுக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினரே இன்று காலை 6 மணியளவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவர்கள் இறந்து கிடந்தனர். தினேஸ், பிரசன்னா ஆகிய இரண்டு காவலர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இனந்தெரியாத நபர்கள் இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய
தாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்