நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும் புறக்கணிக்கிறது மகிந்த தரப்பு

நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும், புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற அமர்வுகள் புறக்கணித்து வருகிறது.

நாளைய அமர்வில், புதிய பிரதமரை நியமிக்க கோரி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

இந்த தீர்மானம் நாளை, வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே, மகிந்த ராஜபக்ச தரப்பு நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அதேவேளை நாளைய அமர்வின் போதும், பார்வையாளர் மாடம் மற்றும், விருந்தினர்கள் மாடம் என்பன மூடப்பட்டிருக்கும் என்று, படைக்கல சேவிதர் தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About செய்தியாளர்

மறுமொழி இடவும்