மைத்திரியின் உரை அவர் ஆட்சிக்கு பொருத்தமற்றவர் என்பதை நிரூபித்துள்ளது – மங்கள

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) ஆற்றிய உரை அவர் ஆட்சிக்கு பொருத்தமற்றவர் என்பதை நிரூபித்துள்ளது என நாடாளுமன்ற மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு இன்னும் ஒருவார காலத்தில் தீர்வு கிடைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(செவ்வாய்கிழமை) மாலை தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், “நாட்டின் நெருக்கடி நிலை அமைதியின்மை எப்படி உருவானது? பின்னணி என்ன? முதலில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. 2014 நவம்பர் 26 லும் கடந்த ஒக்டொபர் 26 லும் நான் எடுத்த முடிவுகள் சரியானவையே.

நாட்டுக்காக எடுக்கப்பட்ட முடிவுகள் அவை. நல்லாட்சியின் கொள்கைகளை பச்சையாக கொன்றவர் ரணில். நான் பொறுத்து பார்த்தேன். ராஜபக்ஷ ஆட்சியில் நான் இருந்த பொறுமையை விட நான் இதில் பொறுமை காத்தேன்“ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே மங்கள சமரவீர, ஜனாதிபதியினை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

“சுதந்திரக்கட்சி மாநாட்டில் பல மணி நேரம் மைத்திரிபால ஜனாதிபதி மேற்கொண்ட வாய்வீச்சு, அவர் ஆட்சிக்கு பொருத்தமற்றவர் என்பதை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கிறது.

பொய்கள், மேலும் பொய்கள் மற்றும் முரண்பாடு, உணர்ச்சிவசமான மற்றும் பாரபட்சம் ஆகியவை அவருடைய வரிசைப்பாட்டிலும் ஒழுங்கமைப்பிலும் பொருந்தியது. குற்றவியல் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதே ஒரே தீர்வு“ என தமது டுவிட்டர் பக்கத்தில் மங்கள தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்