இழுபறிக்குப் பின்னர் இன்று வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை பதவியேற்பு

வடக்கு மாகாண அமைச் சரவையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த அமைச்சு பதவிகள் தொடர்பான சர்ச் சைகளுக்கு இன்றுடன் முடிவு எட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் நான்கு பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவி ஏற்கின்றது.

வடக்கு மாகாண அமைச்சர் கள் மீதான் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து வடக்கு அமைச்சரவை மற்றும் வடக்கின் அரசியல் நிலைமைகளில் பல்வேறு சர்ச்சைகளும் குழப்பங்களும் இடம்பெற்றிருந்தன.
குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கும் பொறு ப்பில் முதலமைச்சருக்கும் தமிழ் தேசிய கூட் டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி களுக்கும் இடையில் பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் ஒரு சில கட்சிகளுடன் குழப்பங்களும் வடக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

அதன் தொடர்ச்சியாக கல்வி மற்றும் விவசாய அமைச்சர்கள் இருவரும் தமது பதவியை இராஜினாமா செய்திருந்தனர். ஏனைய சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்யாது இருந்தனர். அதன் காரணமாக வட மாகாண சபையில் பாரிய இழுபறி, குழ ப்பங்கள் நிலவிவந்தன.

இந்த நிலையில் வடமாகாண கல்வி அமைச்சின் புதிய அமைச்சராக க.சர்வேஸ்வரனும் வடமாகாண சிறுவர் மற்றும் மகளிர் விவகார சமூக சேவைகள் அமைச்சின் புதிய அமைச்சராக திருமதி அனந்தி சசிதரனும் பொறுப்பேற்றிருந்தனர்.
பல குழப்ப சூழ்நிலைக்கு பின்னர் சுகா தார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
ஆனால் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது பதவியை இராஜி னாமா செய்ய முடியாது என பிடிவாதமாக இருந்த காரணத்தினால் அவருடைய கட்சி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து கட்சியில் இருந்து 6 மாதகாலம் நீக்கியிருந்தது, அதனை தொடர் ந்து வடக்கு அமைச்சரவையில் இருந்து டெனீ ஸ்வரனை முதலமைச்சர் நீக்கியிருந்தார்.
இதனை தொடர்ந்தே இன்றைய தினம் புதிய அமைச்சர்கள் வடக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளனர்.
வடமாகாண சுகாதார அமைச்சின் புதிய அமைச்சராக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த வைத்தியர் குணசீலனும், வடமாகாண விவசாய அமைச்சின் புதிய அமைச்சராக முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த க.சிவனேசனும் முதலமைச்சரால் தெரிவு செய்யப்பட்ட தையடுத்து இன்றையதினம் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

அதே நேரம் போக்குவரத்து அமைச்சை முதலமைச்சர் தனது பொறுப்பின் கீழ் வைத்து ள்ளமையால் போக்குவரத்து அமைச்சராக முதலமைச்சர் பதவி ஏற்கவுள்ளார். அத்துடன் மேலும் ஒரு புதிய அமைச்சு பதவியை பொறுப்பேற்று அமைச்சர் அனந்தி சசிதரனும் மீண்டும் பதவியேற்கவுள்ளார்.
இந்த புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் நிகழ்வு இன்றைய தினம் மாலை 2 மணிக்கு வடமாகாண ஆளுநர் ரெயினோல்ட் கூரே முன்னிலையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்