கிளிநொச்சி வெள்ள இடர்! 4633 பேர் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

கடந்த இரவு பெய்த பலத்த மழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டள்ளன.

மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க்பபட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயர் பிரிவில் 701 குடும்பங்களை சேர்ந்த 2550 பேர் பாதிக்கப்பட்டுளு்ளதாகவும், அதில் 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 229 குடும்பங்களை சேர்ந்த 858 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அப்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 629 குடும்பங்களை சேர்ந்த 2026 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 பாதுகாப்பான அமைவிடங்களில் 341 குடும்பங்களை சேர்ந்த 1119 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 17 குடும்பங்களை சேர்ந்த 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பாதுகாப்பான அமைவிடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த சீரற்ற காலநிலையால் இரண்டு வீடுகள் முழுமையாகவும், நான்கு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று
இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு "United States of India" என மதிமுக பொதுசெயலர் வைகோ
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்