வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுக் பொருட்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது.

அந்தவகையில், கிளிநொச்சி, திருநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உலருணவுகள் இன்று (வியாழக்கிழமை) வழங்கிவைக்கப்பட்டன.

இந்த உணவுப் பொதிககளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் குறித்த பகிர்ந்தளித்தனர்.

நோர்வேயில் உள்ள தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி சமூகத்தின் நிதி உதவியுடன் குறித்த பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்