கிளிநொச்சியில் விபத்து: இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, பொது வைத்தியசாலைக்கு இன்று (வியாழக்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது.

பேருந்தின் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனம் அதனை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்தில் இரண்டு டிப்பர் வாகனங்களின் சாரதிகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்