வடக்கு அமைச்சராக சிங்களவர் இருந்தாலும் பரவாயில்லை:சுமந்திரன்!

வடக்கு மீள்குடியேற்றம்,மீள்கட்டுமானம்,அபிவிருத்தி அமைச்சினை சிங்களவரொருவரிடம் கையளிக்கவேண்டுமென நான் கோரி வந்தேன் என தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடமிருந்து அமைச்சினை பறித்தே சிங்களவர் ஒருவரிடமேனும் அதனை கையளிக்க தான் கோரியிருந்ததாக தெரிவித்த அவர் தற்போது அது பிரதமரிடம் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிற்கு அழைத்து பேசிய அவர் அவ்வாறான அமைச்சு பிரதமரிடம் இருக்கவேண்டுமென்ற எமது எதிர்பார்ப்பினை தற்போது நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்த அவர் பொறிமுறையொன்றின் ஊடாக அமைச்சரவையில் இணையாவிட்டாலும் தற்போது அரசில் எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கூட்டமைப்பில் இரட்டை பிரஜா உரிமை பெற்ற எவருமில்லையென தெரிவித்த அவர் அதற்காக தேடுபவர்கள் சோர்ந்து போகாது தொடர்ந்தும் தேடவேண்டுமென அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே கூட்டமைப்பே காணி விவகாரங்கள் தொடர்பில் பல வழக்குகளை தாக்கல் செய்திருந்ததாக தெரிவித்த அவர் லண்டனில் சட்டம் படித்தவர்கள்,கட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றவர்கள் எவரேனும் அத்தகைய காணி விவகாரங்களிற்கு நீதிமன்றிற்கு சென்றிருந்தார்களாவென அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்