வவுனியாவில் ஆயுதங்களுடன் மூன்று இளைஞர்கள் கைது!

வவுனியாவில் நேற்றுமுன்தினம் இரவு ஆயுதங்களுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றபட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் கோயில்குளம் 10 ம் ஒழுங்கை பகுதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை வழி மறித்து சோதனை செய்த வவுனியா தலைமை பொலிஸ்நிலய குற்றதடுப்புபிரிவினர் முச்சக்கரவண்டியில் வாள், கத்திகளை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 3 வாள்கள் கைப்பற்றபட்டதுடன் பயணித்த முச்சக்கரவண்டியையும் போலிஸ் நிலையம் எடுத்துசென்றனர்.

கைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நேற்றயதினம் வவுனியா நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்