புதிய வருடத்திலாவது சர்வதேசம் எம் மீது கரிசனை கொள்ளட்டும்!

புதிய வருடத்திலாவது சர்வதேச சமூகம் தம் மீது கரிசனை கொண்டு தமது உறவுகளை மீட்பதற்கு துணை நிற்கவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பல நாட்களாக நாம் எமது பிள்ளைகளை காண வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் அனைவருமே எம்மை கைவிட்டு விட்டனர். எனவே நாம் தொடர்ச்சியாக சர்வதேசத்தினையே தற்போது எதிர்பார்த்து நிற்கின்றோம்.

எனவே புதிய ஆண்டிலாவது சர்வதேசம் எம்மீது கரிசனை கொண்டு எமது பிள்ளைகளை காண ஆவன செய்து தரவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு தஞ்சையில் உள்ள தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது பல்வேறு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும்
இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகிறோம் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நாவின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*