அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெறவேண்டும்…இல்லையெனில் ஆப்கான் சுடுகாடாக மாறும் – தலிபான் எச்சரிக்கை

தலிபான் அமைப்புக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையாலும் ஆப்கானிஸ்தான் சுடுகாடாக மாறும் என்று எச்சரித்துள்ளது தலிபான் அமைப்பு.

இந்த அவல நிலையைத் தவிர்க்க வேண்டுமாயின் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானில் இருந்து திரும்ப்ப பெறவேண்டும் என்றும் தலிபன் அமைச்பு நிபந்தனை விதித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்புக்கும் இடையில் கடந்த 15 ஆண்டுகளாகப் போர் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.

திபான் அமைப்பு அங்கு சமீபகாலமாக தொடர்ந்து பல தாக்குதல்களை நடத்தி வருவதை அடுத்து அமெரிக்காவில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கச் சிப்பாய்களின் எண்ணிக்கை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.

இதன்படி சுமார் 4 ஆயிரம் சிப்பாய்கள் ஆப்கானிஸ்தானுக்கு விரைகின்றனர். அவர்கள் காலவரையின்றி தலிபான் அமைப்புத் தோற்கடிக்கப்படும் வரை அங்கு முகாமிட்டு இருக்கவுள்ளனர். ட்ரம்பின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தான் தலைமை அமைச்சர் வரவேற்புத் தெரிவித்திருந்தார். ஆனால் தலிபான் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலிபான்கள் செய்தி தொடர்பாளர் சாபிவுல்லாஹ் முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒருவேளை அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிலிருந்து நீக்காவிட்டால் 21ஆம் நூற்றாண்டின் சுடுகாடாக ஆப்கானிஸ்தான் மாறக் கூடும். அமெரிக்கானின் கடைசிச் சிப்பாய் இங்கு (ஆப்கானில்) இருக்கும் வரை ஆப்கானிஸ்தான் சுடுகாடாகிக் கொண்டிருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தலிபான் அமைப்பின் மூத்த தளபதி ஒருவர், ‘அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை போல ட்ரம்ப் பிடித்தவாதமாக இருக்கிறார். அவர்கள் அமெரிக்க சிப்பாய்களை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களது நாட்டை பாதுகாக்க எங்களுக்கு தெரியும்.

ஆப்கன் அரசு அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுகிறது. பல தலைமுறைகளாக நாங்கள் போர் புரிந்து வருகிறோம். நாங்கள் பயப்படவில்லை. நாங்கள் இந்தப் போரை புத்துணர்ச்சியாக எங்கள் உயிர் உள்ளவரை தொடர்வோம்’ என்று தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்