இரணைப்பாலையில் ஆயுதங்கள் அகழ்வுப் பணியில் எதுவும் இல்லை

முல்லைத்தீவு – இரணைப்பாலை பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக கூறப்பட்ட பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் எதையும் மீட்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவானின் அனுமதியுடன் 20 இற்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து குறித்த பகுதியில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டனர்.

மதியம் 3.30 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரையில் ஜேசிபி கொண்டு 20 அடி ஆழத்துக்கு அகழ்வுப்பணியினை மேற்கொண்டபோதும் எந்த வித ஆயுதமும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்