சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக எதிர்வரும் 21ஆம் நாள் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க மேலும் பல நாடுகள் முன்வந்திருப்பதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் தலைமையில், கனடா, ஜேர்மனி, அயர்லாந்து, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை முன்வைத்துள்ளன.

இந்த தீர்மானம் எதிர்வரும் 21ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த தீர்மானத்துக்கு சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்க இணங்கியுள்ளதால், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குவதற்கு மேலும் பல நாடுகள் முன்வந்துள்ளன.

அல்பேனியா, அவுஸ்ரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி , நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பல நாடுகள் இன்று இணை அனுசரணைப் பட்டியலில் இணையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்