பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

ஸ்ரீலங்காவில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் சட்ட சிக்கல்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர்,

இத்தகைய 876 புகையிரத கடவைகளுக்காக மணி மற்றும் ஒளி சமிக்ஞைத் தொகுதிகள் பொருத்தப்படவுள்ளதாகவும், இந்தப் பணி ஐந்து கட்டங்களாக நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்