யாழ் சித்தங்கேணியில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் காணியொன்றில் உள்ள பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அயலவர்களால் குறித்த சடலமானது கண்டுபிடிக்கப்படடுள்ளது.

அருகில் இருக்கின்ற வீடுகளில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தூர்வாடை வீசியதையடுத்து இது தொடர்பாக தேடிப்பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த காணிக்குள் இருந்த பாவனையற்ற கிணற்றுக்குள் பெண்ணொருவரின் சடலம் இருப்பதும், அதிலிருந்தே துர்வாடை வீசுவதும் அவர்களால் கண்டறியப்பட்டிருந்தது.

சடலத்தினை அவதானித்த சிலர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சுளிபுரம் பகுதியில் வீட்டை விட்டு காணமல் போயிருந்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த குகதாசன் தாரணி (37வயது) என்பவருடையதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் இதுவரையில் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், கிணற்றுக்கு அண்மையில் இழுத்து சென்றது போன்ற அடையாளங்கள் தென்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்