லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் விடுதலை

லண்டனின் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பிரித்தானிய காவல்துறையினரால் எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லூட்டன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை மாலை வந்திறங்கிய நான்கு இலங்கையர்கள், புகலிடம் கோர முற்பட்ட போது, பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தாங்கள் சிறிலங்காவில் வழக்குகளை எதிர்நோக்கியிருப்பதாக, அவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியிருந்தனர்.

மறுநாள் வியாழக்கிழமை, தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் அந்த நான்கு பேரையும் கைது செய்திருப்பதாக பிரித்தானிய காவல்துறை கூறியிருந்தது.

அவர்கள், பெட்போர்ட்சைர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், நேற்று பிரித்தானிய ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்ட போதே, அவர்கள் விடுவிக்கப்பட்ட தகவலை காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், நால்வரிடமும் விசாரணைகள் தொடரும் என்றும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்