முல்லைத்தீவில் விபத்து – இராணுவ அதிகாரி உயிரிழப்பு

முல்லைத்தீவு, 03 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து, இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கிப் பயணித்த கன்டர் வாகனம் ஒன்று வற்றாப்பளையில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிள்மீது மோத முற்பட்ட வேளை வீதியினை விட்டு விலகி ஓராமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன்போது வீதியின் ஓரமாக கடமையில் நின்ற இராணுவ பொலிஸார் மீது கன்டர் வாகனம் மோதிக்கொண்டதில் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய முள்ளியவளை குமாரபுரம் பகுதியினை சேர்ந்த கன்டர் வாகனத்தின் சாரதியை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்