திருகோணமலையில் பாரிய போராட்டம் – உறவுகள் அழைப்பு

எதிர்வரும் 27ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திருகோணமலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த போராட்டம், மட்டக்களப்பு காந்தி சிலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு அங்கிருந்து மனித உரிமை ஆணைக்குழுவை நோக்கி ஊர்வளமாக செல்லவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அரசியல் பிரமுகர்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்தவிதமான பதிலையும் வழங்காத நிலையில், சர்வதேசமே தமக்கான தீர்வை வழங்கும் என நம்பிருந்ததாகவும் எனினும் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி சர்வதேசமும் தம்மை ஏமாற்றிவிட்டதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்