யாழில் மின்னல் தாக்கி பெண்கள் உட்பட மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் உட்பட மூவர், அதிக மழை காரணமாக தென்னைமரத்தடியில் உள்ள கொட்டிலில் தஞ்சம் புகுந்த வேளையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் திருநாவுக்கரசு கண்ணன் (48 வயது), கந்தசாமி மைனாவதி (52 வயது), ரவிக்குமார் சுதா (38 வயது) ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மாவை சேனாதிராஜாவின் மகனைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் முறுகல் நிலை
எதிர்வரும் 27ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். திருகோணமலையில்
முல்லைத்தீவு, 03 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த

About இலக்கியன்

மறுமொழி இடவும்