சிவாஜிலிங்கத்தின் 23 நாள் நடை பயணம்!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு தண்டனை வழங்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படவுள்ள நீதி கோரிய நீண்ட பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தை செல்வாவின் 42 ஆவது நினைவு தினமான எதிர்வரும் 26ஆம் திகதி வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில், நீதி கோரிய நீண்ட பயணம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

திருகோணமலை , மட்டக்களப்பு மாவட்டங்களை பிரிக்கும் வெருகல் ஆலய முன்றிலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நடைப் பயணம் சுமார் 23 நாட்கள் வரை தொடரவுள்ளதுடன், இறுதியாக மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவுதின முற்றத்தை சென்றடையவுள்ளது.

இந்த நடைபயணம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு திருகோணமலையில் நேற்றைய தினம் நடைபெற்ற போதே வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான
முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை)
கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்