குண்டுவெடிப்புகளில் 9 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 185 பேர் பலி – 469 பேர் காயம்

சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் மூன்று ஆடம்பர விடுதிகளிலும், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில், ஒரே நேரத்தில் இன்று காலை குண்டுகள் வெடித்தன.

இந்தச் சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, 469 என்று மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக
ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. இறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த

About இலக்கியன்

மறுமொழி இடவும்