பல்கலைக்கழக மாணவர்கள் கைதின் பின்னணியில் சுமந்திரன் !!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரின் கைதின் பின்னணியில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே இருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற ஐந்து மாத காலத்துள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும் அவர்களோடு ஒட்டி உறவாடி ஆதரவு அளித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிராக பாரிய அளவில் மக்களை ஒன்றுதிரட்டி பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள்.

இது ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் உள்ளிட்டவர்களுக்கும் பெரும் குடைச்சலை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தருணம் பார்த்து மாணவர்களை பழிவாங்கியிருப்பதாகவும் குறித்த மாணவர்களுக்குப் பக்கபலமாக முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான மக்கள் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ் உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கிவருகின்றமையும் சகிக்க முடியாத நிலையினை சுமந்தினுக்கு ஏற்படுத்தியிருந்ததாகக் கூறப்படுகின்றது.

முன்னர் இருந்த மாணவர் ஒன்றியங்களை உடைத்து மதுபானம் மடிக்கணனிகள் உள்ளிட்டவற்றை வழங்கி தேர்தல் பணிகளில் சுமந்திரன் ஈடுபடுத்தியிருந்தார். எனினும் தற்போதைய அணியினர் சுமந்திரனுக்கும் அவரது எஜமானான ரணில் விக்கிரமசிங்கவிற்கும் எதிராக நிலைப்பாட்டில் கடுமையாக நிற்பதே மாணவர்களின் கைதின் பின்னணி என்றும் இதன் மூலம் மாணவர்களை வழிக்குக் கொண்டுவர சுமந்திரன் முயற்சிப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்தே தன்மீது சந்தேகம் ஏற்படாதவகையில் கைது செய்யப்பட்ட மாணவர்களைச் சந்தித்த சுமந்திரன் அவர்களின் விடுதலைக்காக பாடுபடப்போவதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். எனினும் நாடாளுமன்றில் அவசரகாலச் சட்டம் கொண்வரப்பட்டபோது முதல் ஆளாக நின்று கை உயர்த்தி அதனை ஆதரித்தவர் சுமந்திரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்