மூக்கை நுழைத்த இந்தியா! முகநூல் எங்கும் தலைவர் படம்!

தமிழீழ தேசியத்தலைவரின் ஒளிப்படங்களை முகநூல்களில் இருந்து அகற்றும் நடவடிக்கை முகநூல் நிர்வாகம் தொடங்கியுள்ளமை தமிழ் உணர்வாளர்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முகநூல் நிர்வாகத்திடம் இந்திய ஊடகம் கருத்து கேட்ட்டபோது விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் எனவும் , இந்தியாவில் தடைசெய்தும் இருப்பதனால் எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லாததால் ஒளிப்படங்களை எடுக்கிறோம்’ என விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்திய அரசாங்கம் சமூக வலைதளங்களின் அதிகாரிகளை அழைத்து இதுதொடர்பாக ஆலோசனைகளை நடத்தியதாகவும் இவ்வாறான தங்கள் அரசுக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய வகையில் அமையும் விடையங்களை அகற்றுமாறு பணித்துள்ளார் என்றும் அதன் அடிப்படையில் தான் தேசியத்தலைவரின் ஒளிப்படம் அகற்றப்பட்டு வருவதாக தமிழ் உணர்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவும் , தமிழீழ தனியரசுக்கான அவசியத்தின் புரிதலும் தமிழ்இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதனால் இந்திய அரசாங்கம் கையறு நிலையில் இவ்வாறான செயலில் இறங்கியுள்ளது தமிழ் உணர்வாளர்கள் கூறுகின்றனர்,

அதேவேளை இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டன வாசகங்க்களோடு தேசியத்தலைவரின ஒளிப்படத்தை #prabhakaran_is_our_community_standard #பிரபாகரன் பெயர் சொல்லோடு முகநூலிலும் டுவிட்டேர்களின் தமிழ் இளையவர்களால் பகிர்ந்து முன்னிலையாக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்