புலனாய்வு தகவல் பரிமாற்றத்தினால் தீவிரவாதத்தை அழிக்கலாம் – மகிந்தவிடம் அமெரிக்க தூதுவர்

தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து, நட்பு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில் நேற்று முன்தினம் அமெரிக்க தூதுவர் சந்தித்துப் பேசினார்.

இதன்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

2001 செப்ரெம்பர் 11 தாக்குதலை அடுத்து, தமது நாடு தீவிரவாதிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளதன் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைக் கண்டித்த அமெரிக்கத் தூதுவர், தீவிரவாதத்தை அடியோடு அழிக்க சிறிலங்காவுக்கு எத்தகைய உதவியை வழங்கவும் அமெரிக்கா தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர
யாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். வலிப்பு ஏற்பட்டு

About இலக்கியன்

மறுமொழி இடவும்