கொழும்பில் இரு இடங்களில் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி, ஒருவர் காயம்

கொழும்பு – வத்தளை, ஹுணுப்பிட்டிய பகுதியில் நேற்றிரவு நிறுத்தாமல் வேகமாகச் சென்ற வாகனம் ஒன்றின் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

வேகமாகச் சென்ற கார் ஒன்றை நிறுத்துமாறு சிறிலங்கா கடற்படையினர் சைகை செய்தனர். எனினும், காரை நிறுத்தாமல் தப்பிச் செல்ல சாரதி முற்பட்டார்.

இதையடுத்து, கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காரைச் செலுத்திய சாரதி படுகாயமம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமானார்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய நபர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதேவேளை, கொழும்பில் நேற்றிரவு நடந்த மற்றொரு சம்பவத்திலும், நிறுத்தாமல் சென்ற கார் மீதும் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதில் பயணம் செய்தவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர
யாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். வலிப்பு ஏற்பட்டு

About இலக்கியன்

மறுமொழி இடவும்