கொழும்பில் பெருமளவில் சிறிலங்கா படையினர் குவிப்பு – கவசவாகனங்களில் ரோந்து

சிறிலங்கா முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்குளி உள்ளிட்ட கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் துருப்புக்காவி கவசவாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் ரோந்துக் காவலில் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவத்தின் சிறப்புப் படையின் உந்துருளிப் படையணியும் தீவிரமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

வழக்கத்துக்கு மாறாக அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை தொடக்கம், வாகனங்கள் அனைத்தும் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வருகின்றன.

இதனால் கொழும்பு நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர
யாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். வலிப்பு ஏற்பட்டு

About இலக்கியன்

மறுமொழி இடவும்