சிங்களவர்,முஸ்லீம்கள் இடையே தொடரும் முறுகல் வீடுகள் எரிப்பு!

இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவாக்கி இப்பொழுது நாடுமுழுவதும் வன்முறைகள் மோதல்கள் பரவிவருகிறது , நீர்கொழும்பு ,சிலாபம் ,குளியாபிட்டிய என்று தொடக்கி இன்று ஹெட்டிபொல என்ற இடத்தில தொடர்கிறது. பதற்றம் நிலவும் இடங்களில் ஊரடங்கு அமுல்படுத்தியும் , சமூகவலைத்தளங்களை இடைநிறுத்தியும் அரசாங்கம் வன்முறைகளை கட்டுப்படுத்த முனைந்து அங்கங்கே நீடிக்கிறது.

தற்போது ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலுக்கு அந்தப்பகுதியில் இருந்து தகவல்கள் கிடைத்திருப்பதாக கொழும்பு ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரி தீயூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
நோன்புக் காலம் என்பதால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்
அமெரிக்காவுடனான உடன்பாடுகள் குறித்து, வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஒரு குழுவே, கொந்தளிப்பை ஏற்படுத்தும் நோக்கில் பொய்களை பரப்புகிறது என்று சிறிலங்கா நிதி
மட்டக்களப்பு – ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்