தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த ரிசார்ட், கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது?

முஸ்லிம் அமைச்சர் ரிசார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

ரிசார்ட் பதியுதீனைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியத்திற்கு முற்றிலும் எதிரானவர். முஸ்லிம் தேசியம், இஸ்லாம் மதவாதம் போன்றவற்றில் தீவிர பற்றுறுதி உடையவர்.

தமிழர் தாயகத்தைச் சூறையாடுவதில் தீவிரம் காட்டி வருபவர். குறிப்பாக, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து முஸ்லிம் குடியேற்றங்களை அமைத்திருக்கின்றார். தொடர்ந்தும் தமிழர் நில அபகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக சிங்கள அரசுடன் இணைந்து சர்வதே ரீதியாக பிரச்சாரங்களை மேற்கொண்டவர். முஸ்லிம் ஆயுதக் குழுக்களை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.

இவ்வாறான ஒருவருக்கு எதிராக சிங்களத் தலைமை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முயற்சிகளை எடுத்துள்ள நிலையில், தமிழர்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கோருகின்றனர்.

ரிசார்ட் பதியுதீன் போன்றவர்கள் சிறிலங்கா அரசியலில் தொடர்ந்தும் இருந்தால் அது தமிழ் மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் எனவும் தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் றிசாரட் பதியுதீனின் அமைச்சு ஊடாக பல்வேறு உதவிகளையும் சலுகைகளையும் பெற்று வருகின்றனர் எனவும் இதனால் குறித்த பிரேரணைக்கு ஆதரவளிப்பார்களா என்பதில் சந்தேகம் நிலவுகின்றது எனவும் கூறப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்