யாழில் படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

யாழ். பண்ணை கடல் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

குருசடி தீவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது நால்வர் கடலுக்குள் வீழ்ந்து நீரில் மூழ்கியிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் இருவர் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

யாழ்.நாவான்துறையைச் சேர்ந்த குயின்சன் என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். மேலும் காணாமல் போன மற்றுமொரு நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தொடர்டர்புடைய செய்திகள்
நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக
யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை
யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்