வித்தியாவின் வழக்கை துரிதப்படுத்துமாறும், விஜயகலாவைக் கைதுசெய்யுமாறும் ஆர்ப்பாட்டம்!

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறும், மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனைக் கைதுசெய்யுமாறும் கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமhனது கொழும்பிலுள்ள ஐ.நா தலைமை அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தின்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கெதிராகவும் கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்ற கயவர்களைக் கைது செய், விஜயகலா மகேஸ்வரனைக் கைது செய் போன்ற சுலோகங்கள் எழுதிய அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஆர்ப்பாட்டக் காரர்களால் மகஜர் ஒன்று ஐநா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்டர்புடைய செய்திகள்
நல்லூர் பின் வீதியில் இடித்தளிக்கப்பட்ட நிலையிலிருந்த தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் கட்டப்பட்டிருந்த பதாதைகள் இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரவோடிரவாக
யாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை
யாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்

About இலக்கியன்

மறுமொழி இடவும்