தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துப் போராடுவோம் –சுகிர்தன்!

வடமாகாணத்திலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பான பிரச்சனைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று வடமாகாணசபையின் 103ஆவது அமர்விலேயே குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும், வடமாகாணத்திலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளினால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

இப்பிரேரணை குறித்த விவாதத்தின்போதே வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாணத்தின் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி தண்டவாளத்தில் தலைவைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
வடக்கு மாகாண சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் நாளை நள்ளிரவுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று நடந்த கடைசி அமர்விலேயே வடக்கு மாகாண
வடமாகாணசபை உறுப்பினர் ஞா.குணசீலனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற கண்ணாடி விநியோகத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக மாகாண பிரதி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வட மாகாணத்திற்குள் மே 18 ஆம் திகதி வட மாகாண சபைக்கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவது எங்களது

About இலக்கியன்

மறுமொழி இடவும்