தமிழகத்தில் பெரும் கட்சியாக முன்னேறியுள்ள நாம் தமிழர் கட்சி!

லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தி வருகிறார். பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல நூறு கோடி ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்கின்றனர்.

செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!

ஆனால் எளிய வீட்டுப் பிள்ளைகளை தேர்தல் களத்தில் நிற்க வைத்து பிரசாரம் செய்தார் சீமான். அவரது அரசியலை பிரிவினைவாதம் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தன பிரதான கட்சிகள்.

இம்முறை லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் அந்த அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வந்துள்ளது.

ஆஹா.. அபாரம்.. குத்தாட்டத்திலும் அதிமுகவை வீழ்த்தியது திமுக.. எத்தனை சோதனைகள் பாருங்க!

குறிப்பாக தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவற்றைவிட நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக சீமான் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதையே இன்றைய வாக்கு நிலவரம் வெளிப்படுத்துகிறது.

சீமான் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம்.. அப்ப வேடிக்கையை பாருங்க என குறிப்பிடுவார். சீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கியிருப்பார்கள்.

கனவு மெய்ப்படுகிறது!

About இலக்கியன்

மறுமொழி இடவும்