தனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி

டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசு பதவியேற்கும் வரை பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்திய ஆட்சியை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக 2ஆவது முறையாக நரேந்திர மோடி வரும் 30ஆம் திகதி பதவியேற்கிறார்.

தனி பெரும்பான்மை பலத்துடன், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாகப் பதவியேற்கும் வரலாற்று பெருமையை ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெறுகிறார்.

இந்நிலையில், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் 16அவது நாடாளுமன்ற மக்களவைக்கான காலாவதி நாள் ஜூன் 3ஆம் திகதி என்பதால், அதற்கு முன்பாக புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். அதையடுத்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16ஆவது மக்களவையை கலைத்து 17ஆவது மக்களவையை ஏற்படுத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை அளித்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பிக்களும் எதிராக 105
2012-ல் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய டெல்லி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் 4 பேரும்
பாலியல் வன்புணர்விற்கு பின் படுகொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்