தமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்!

அவரசகாலச் சட்டத்தினால் தாமும் தமிழ் மக்களுமே பல்வேறு பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

தமிழர்களின் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம் உள்ளன. தமிழர்கள் பலர் சிறையில் வாடுகின்றனர். ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளபோதும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமல் உள்ளனர். முன்னாள் போராளிகள் தமது குடும்பங்களுடன் இணைந்துவாழ்வதற்கான நல்லெண்ணத்தை ஏன் அரசாங்கத்தினால் வெளியிட முடியாதுள்ளது.

கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசத்தில் அமைந்திருந்த சிவன் கோவில் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அங்கிருந்த பிள்ளையார் கோவிலும் அகற்றப்பட்டுள்ளது. அசரவாகலச் சட்டத்துக்கு வாக்களித்துவிட்டு சொந்தக் காசில் சூனியம் வைத்தவர்களாக நாம் மாறியுள்ளோம். அந்தளவுக்கு சோதனைகளும், கொடுபிடிகளும் அதிகரித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்