தமிழ் இராணுவம் கொள்ளையில்?

மகிந்த அரசினால் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் சிப்பாய்கள் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது.கொள்ளை சம்பவம் தொடர்பில்; சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் தமிழ் இராணுவச்சிப்பாய் ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற தினமே புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரைக் கைது செய்தனர். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மற்றொரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன.

அந்த வீட்டில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் வசித்து வந்த நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அதனால் கொள்ளையிடப்பட்ட பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தென்மராட்சியில் வெடிபொருட்களுடன் கைதாகியிருந்தார்.

அதேபோன்று நாவற்குழி பாலத்தில் மற்றொரு சிப்பாய் தாக்கப்பட்டுமிருந்தார்.

ஏற்கனவே இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் இளைஞர்கள் பலரும் இராணுவத்திலிருந்து தப்பித்திருந்த நிலையில் எஞ்சியுள்ள சிலரே இத்தகைய கொள்ளைகளில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப்
அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் இன்று
நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால்

About இலக்கியன்

மறுமொழி இடவும்