17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முடிவுகளின் படி, ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும், ஜேவிபி 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

இந்த தேர்தலில், பொதுஜன பெரமுனவுக்கு 23,372 வாக்குகளும், ஐதேகவுக்கு 10,113 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 5,273 வாக்குகளும், ஜேவிபிக்கு 2,435 வாக்குகளும் கிடைத்துள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்