சஜித்துக்கு சந்திரிகா ஆதரவு – 28 கட்சிகளுடன் புதிய கூட்டணி உடன்பாடு கைச்சாத்து

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் 28 அரசியல் கட்சிகள், 30 பொது அமைப்புகள் இணைந்து, ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கும்- புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்தப் புதிய கூட்டணியில், ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தேசிய இயக்கம், ஜாதிக ஹெல உறுமய, தேசிய ஐக்கிய முன்னணி, சமசமாஜ கட்சி, உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்துள்ளன.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான எமது சிறிலங்கா இயக்கமும் இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைக்க இந்த புதிய கூட்டணி கடுமையாக பாடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்