பலாலி – திருச்சி இடையே வாரத்தில் 3 விமான சேவைகள் – வரும் 10 ஆம் நாள் ஆரம்பம்

தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கும் இடையில், வாரத்தில் மூன்று விமான சேவைகளை நடத்தவுள்ளதாக பிட்ஸ் எயர் (Fits Air) நிறுவனம் அறிவித்துள்ளது.

நொவம்பர் 10ஆம் நாளில் இருந்து திருச்சி- யாழ்ப்பாணம் இடையே இந்த விமான சேவை, வாரத்தில் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளதாக, பிட்ஸ் எயர் நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னர் எக்ஸ்போ எயர் என்ற பெயரில், அழைக்கப்பட்ட இந்த நிறுவனம் உள்நாட்டு விமான சேவைகளையும், வெளிநாட்டு சரக்கு விமானப் போக்குவரத்து சேவைகளையும் நடத்தி வருகிறது.

முதல் முறையாக திருச்சி – யாழ்ப்பாணம் இடையில் வெளிநாட்டு விமான சேவையை இந்த நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்