புலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து விடுதலைப்புலிகள் தான் இந்த படுகொலைக்கு காரணம் என்று விடுதலைபுலிகளை சட்ட விரோதமான இயக்கம் என்றும் கூறி இந்தியா முழுவதும் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த தடை கடந்த மே மாதம் முடிவுக்கு வந்ததால், மீண்டும் மேலும் 5 வருடங்களுக்கு ( வரும் 20௦4) ஆண்டு வரை நீட்டித்துள்ளது. இந்த தடை நீட்டிப்பு குறித்து எந்த ஆட்சேபனையும் இருந்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாய விசாரணையின் போது தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அதனையடுத்து, புதுதில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சாகல் தலைமையில் மதுரையில் நடந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்ற தீர்ப்பாயம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. அதில் மதிமுக கட்சித் தலைவர் வைகோ ஆஜராகி விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டம் குறித்து அவரது கருத்துக்களைத் தெரிவித்து வாதிட்டார் . எனினும் இந்நிலையில், இன்று மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியா முழுவதும் தடைவிதித்து, அதனை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த தமிழக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது நாம்தமிழர் கட்சி சீமான் ராஜீவ்காந்தியை தமிழர்கள் தான் படுகொலை செய்தோம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் பல எதிர்ப்பு விமர்சனங்களையும் சீமான் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்