கூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தை விமர்சனம் செய்தவர் போலிக்குற்றச்சாட்டில் கைது!

சஜித் பிரேமதாசவை ஆதரித்து சங்கிலியன் பூங்காவில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முனைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமையில் மாலை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு வந்த நபர் ஒருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கடுமையான விமர்சித்துள்ளார். அவர் கூட்டத்திற்கு இடையூறாக இருக்கிறார் என பொலிசாரால் எச்சரிக்கப்பட்டார்.

பொலிசாருக்கும், அவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

சங்கிலியன் பூங்காவிற்கு பின்புறமாக அவரை வழிமறித்த வீதிப் போக்குவரத்து பொலிசார் அவரை துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதன்போது அவர் மதுபோதையில் இருந்தார் என குறிப்பிட்டு, அவரை கைது செய்த பொலிசார், அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்