1000வது நாளில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுடன் (15) 1000 நாட்களை பூர்த்தி செய்துள்ளது.

வடக்கின் ஐந்து மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டமே இன்று 1000 நாட்களை எட்டியுள்ளது.

ஏனைய பகுதி மக்களின் போராட்டங்களும் அடுத்த சில நாட்களில் 1000 நாட்களை பூர்த்தி செய்யவுள்ளன.

இதேவேளை, 1000 நாட்களாக போராடும் இந்த மக்களுக்கு இதுவரை உரிய பதிலும் தீர்வும் வழங்கப்படவில்லை. அரசியல்வாதிகளினாலும் கைவிடப்பட்ட அநாதைகள் போல் அவர்கள் போராடி வருகின்றனர்.

இன்னொருபுறம் அந்த மக்களை அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும் சிலர் அவர்கள் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வழிநடத்தல்களை முன்னெடுப்பதும் குறிப்பிடத்தக்கது.

1000 நாட்கள் பூர்த்தியை முன்னிட்டு வவுனியா உறவுகள் கந்தசாமி ஆலயம் முன் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்