சிவில் பாதுகாப்பு பிரிவில் உள்ள தமிழர்களிடம் கட்டாயப்படுத்தி இரத்தம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்!

வன்னிப்பிராந்தியத்தில் உள்ள முன்னாள் போராளிகள் பொது மக்களை இணைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் பாதுகாப்பு பிரிவில் (CSD) பணிபுரிவோரிடம் வலுக்கட்டாயமாக இரத்தம் பெறும் நடவடிக்கை இன்றில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரத்தம் வழங்காதவர்கள் கட்டாய பயிற்சிக்கு ஆளாக்கப்படுவர்கள் என்ற அச்சுறுத்தலின் பெயரிலேயே மேற்கொள்ளப்பட்டு வரும் இரத்தம் பெறும் நடவடிக்கை விசுவமடு மற்றும் வள்ளிபுனம் பகுதியில் உள்ள CSD அலுவலகத்தில் வைத்து பெறப்படுகிறது. இந்த கட்டாய இரத்தம் பெறும் நடவடிக்கையில் பெண்களும் விதிவிலக்கல்லாது ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

தெற்குப் பகுதியில் டெங்கினால் பாதிக்கப்பட்ட சிங்களர்களுக்காகவே இவ்வாறு காட்டாயத்தின் பெயரில் தமிழர்களிடம் பெறும் இரத்தம் கொண்டு செல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த கட்டாய இரத்தம் பெறும் நடவடிக்கையில் இரத்தம் வழங்காதவிடத்து அடிப்படை பயிற்சிகாக அனுப்பபடுவர் ஏன்றும் முன்பள்ளி ஆசிரியர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

படத்தில் உள்ளவர் CSD பொறுப்பதிகாரி றொசான்.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்