கலைக்கப்படுகிறது ரணில் அரசாங்கம் – புதிய பிரதமராக தினேஸ்?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, மக்கள் ஆணைக்கு அடிபணிந்து, ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவி விலகவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பிற்பகல் 5 மணியளவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில், மக்களின் ஆணையை ஏற்றுக் கொண்டு பதவி விலகும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் தானாகவே கலைக்கப்பட்டதாகி விடும்.

நாளை அதிபராகப் பதவியேற்றதும் புதிய அமைச்சரவையை கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளார்.

இந்த நிலையில், புதிய பிரதமராக தினேஸ் குணவர்த்தனவை நியமிக்குமாறு விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்டர்புடைய செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஷ வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பின்
தாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்
சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல நீதின்றம் தடை விதித்துள்ளது. குறித்த பெண் அதிகாரி

About இலக்கியன்

மறுமொழி இடவும்