வாழ்த்து தெரிவித்த மோடி – விரைவில் சந்திக்க விருப்பம் வெளியிட்டார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன வின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடி கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “எங்கள் இரு நாடுகளுக்கும், மக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், எங்கள் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச,”எங்கள் இரு நாடுகளும் வரலாறு மற்றும் பொதுவான நம்பிக்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன, எங்கள் நட்பை வலுப்படுத்தவும், விரைவில் உங்களைச் சந்திக்கவும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஷ வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பின்
தாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்
சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல நீதின்றம் தடை விதித்துள்ளது. குறித்த பெண் அதிகாரி

About இலக்கியன்

மறுமொழி இடவும்