ஸ்ரீகந்தா உள்ளிட்டோர் நீக்கம் – கட்சியின் அதிரடி ஆரம்பம்!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா, யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்டர் விமல்ராஜ் மற்றும் துணை அமைப்பாளர் ஜெ.ஜனார்தன் ஆகியோர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று (23) திருகோணமலையில் அவர்களது கட்சி அலுவலகத்தில் உப தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், முக்கியஸ்தர் வினோராதலிங்கம் மற்றும் ஜனா கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை 3.30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் பல்வேறு வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் மாலை 7.15 மணிக்கு நிறைவடைந்தது.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கம் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுக்கு அமைய சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என் முடிவு செய்திருந்த போதிலும் யாழ் மாவட்ட சி.விமல்ராஜ், துணை அமைப்பாளர் ஜெ.ஜனார்த்தன் மற்றும் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா ஆகியோர் கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக செயற்பட்டனர்.

இந்நிலையிலேயே அவர்கள் மூவரும் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்