அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் – கோத்தா

அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த பிக்குகள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர்,

“எனக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையின் படியே நான் செயற்படுவேன்.

ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும்.

சில அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கமை, குற்ற வி்சாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் விசாரணைகளை நடத்தினர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்