ஶ்ரீகாந்தா முடிவு: அதிகரிக்கும் தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை

ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் பொறுப்பிலிருந்து சிறிகாந்தாவை இடைநிறுத்துவதென நேற்று முன்தினம் ரெலோ தலைமைக்குழு முடிவெடுத்தது. அது குறித்த கடிதம் நேற்று அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய சிறிகாந்தா, புதிய கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இதில் ரெலோவின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் பலர் இணைந்து கொள்வார்கள் என தெரிகிறது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா.குகதாசும் இதில் இணையலாமென கருதப்படுகிறது.

எனினும், எம்.கே.சிவாஜிலிங்கம் அந்த கட்சியில் இணையாமல், அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழமக்கள் சுயாட்சிக்கழகத்தில் இணையலாமென தெரிகிறது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கும் பேச்சுக்கள் நடந்து வருகின்றன.

இதேவேளை, அடுத்த சில தினங்களில் என்.சிறிகாந்தா யாழில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி தனது முடிவை அறிவிக்கவுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்