நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான கடமையில் ஒன்றாகும். அவ் வகையில் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் 24-11-2019 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை 7.30 மணியளவில் 32 A range view road, Mount Albert, Auckland 1025 எனும் இடத்தில் மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது. முதல் நிகழ்வாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஈகச்சுடரினை வீர வேங்கை ஆர்த்தனாவின் தாயார் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலர்வணக்கம் இடம்பெற்றது. பின்னர் காவினன் அவர்களின் மாவீரர் கவிதை இடம்பெற்றது. இதனை தொடர்ந்து நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் தயாகரன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.

தொடர்ந்து மாவீரர் குடும்ப உறவுகளுக்கு நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் 2020 ம் ஆண்டிற்கான ஈழத்து நாட்காட்டி வழங்கப்பட்டது. ஈழம் அடையும் வரை ஓயோம் என்ற உறுதி மொழியுடன் மாவீரர் கானம் இசைக்க நிகழ்வுகள் இனிதே நிறைவேறியது. இறுதியாக விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றது. மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வில் 60 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்வானது இழந்த உறவுகளின் உயிர்த்தியாகங்களை எவராலும் விலைபேசிட முடியாது என்பதை பறைசாற்றி நிற்கின்றது. மக்களின் இந்த அன்பினையும், மாவீரர் மீதான பற்றுதலையும் மேலும் மேலும் உரிமையுடன் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் வேண்டி நிற்கிறார்கள்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

About இலக்கியன்

மறுமொழி இடவும்