ஜெனிவா தீர்மானத்துக்கான ஆதரவு மீள்பரிசீலனை – சிறிலங்கா அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய, சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் இடைக்கால அரசின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ் குணவர்த்தன நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“சிறிலங்கா இந்த தீர்மானத்தை தேசிய நோக்கில் அதை சீரான மற்றும் பாகுபாடற்றதாக மாற்றுவதில் கவனம் செலுத்தும்.

முந்தைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களையும், குறிப்பாக கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவை ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ), படைகளின் நிலை (சோபா) மற்றும் மிலேனியம் சவால் (எம்.சி.சி) ஆகியவற்றை சிறிலங்கா மறுபரிசீலனை செய்யும், தேவைப்பட்டால் திருத்தங்களை அறிமுகப்படுத்தும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்