பிரபாகரன் இவருக்கு இணை, இவரே!

அதிநீள காலத்துககு ஓருமுறை,
ஒர் தேசிய இனத்தின் மீட்சிக்காய்,
அந்த, இனத்தில் ஓர் அருந்தலைவர் உதிப்பார் என்பார்கள்
அதுபோல்,
வேயுயர்வரீமா நுடப்ம் திணிந்தவராய்,
எம் துயர் வாழ்விடைத் தோன்றிய,
தமிழீழ தேசத்தின் மாதலைவர்,
மேதகு வே. பிரபாகரன் அவர்களை தமிழ் இனத்தினரின் சிந்தைகளில் நிலைத்த அந்த,
நற்திறல் வேந்தனை,
அவர்தம் பண்பினிற் சிறுதுளியை.. எடுத்து,
வரிவடித்துப் பார்க்கின்றோம்.

கண்ணியம் கடைமை கட்டுப்பாடு என்னவென்று காட்டி நிலைநாட்டிய திடமனம் உடையதோர் செம்மல்,
பகையஞ்சும் தகை மிகு வீரராய் வீற்றிருந்து,
ஆற்றலின் எழுச்சியோடு,
எம்மண்ணைக் காவல்செய்த அந்தக் காலத்தை எண்ணியே..
இன்றோ, யாமெல்லாம் நிலையிழந்து அவரை நினைந்துருகி நிற்கின்றோம்!

எடுத்ததை முடிப்பதல்லால் இளைத்திடும் தளர்சச்p இல்லார.; தொடுத்திட்டவரீமாபோர்களில்,
தோல்வியை அறியார்,
தோல்வியே நேரினும் அதை முறியடித்தே.. மேலும் முயன்று,
வெற்றியாய் ஆக்கும்வரை ஓய்;விலார்,
அவரோ பாயும் புலிநிகற் பண்பினர். எம் அன்பினை ஆண்டவர் எந்தமிழ்த் தேசியத்தின்,

மா தலைவரவரின் இடத்தினை நிரப்ப எவருளர்.
இமயநாடு மிரட்டிய போதும்,
மற்றும்.. ஆதிக்க சக்திகள்கூடியுதவியும்,
பதவி வெறிகொண்ட எம்மவர் சிலர்சேரந்து.. எதிரிக்குக் காட்டிக்கொடுத்தும்,
எமினப் பகை நெருப்பைத் தூண்டி எரியவிட்டும்,
அந்த முள்ளிநிலத்தை நீறாக்கியபோதும்.. இவைகண்டுசோரா மிகைவியூகம் கொண்டு,
களம்நடத்தித்,தன்அணியோடுதுயரக்hவி மாதலைவர்!…. ஆயின் அவர்,
எப்போதும் எம் மனங்களில் வாழ்வார்!

-ந. கிருஷ்ணசிங்கம்-

About இலக்கியன்

மறுமொழி இடவும்